அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்ததை விட அதிகளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்கா நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், பயணத்தை நிறைவு செய்து இன்று காலை அவர் தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சருக்கு, திமுக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்க பயணத்தில் 7 ஆயிரத்து 618 கோடி ரூபாய் முதலீட்டில் 19 நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக தெரிவித்தார்.