நீலகிரி மாவட்டம் உதகையில் போலி நகைகளை அடமானம் வைத்து 9 லட்ச ரூபாய் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உதகையில் செயல்பட்டு வரும் யூகோ வங்கியில் காந்தள் பகுதியை சேர்ந்த அயூப் என்பவர் கடந்த 2023 ம் ஆண்டு 261 கிராம் நகையை அடமானம் வைத்து 8 லட்சத்து 77 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் யூகோ வங்கி அதிகாரிகள் வருடாந்திர ஆய்வு பணிகள் மேற்கொண்டபோது, அயூப் உள்ளிட்ட, 4 பேர் அடகு வைத்த நகைகள் போலி என்பது தெரிய வந்தது.
இந்த மோசடி சம்பவத்திற்கு நகை மதிப்பீட்டாளர்கள் சந்திரசேகரன், வினோத் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.