திருச்சியில் பேக்கரி கடை ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவலரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் ராம்ஜி நகர் அருகே செயல்பட்டு வரும் பேக்கரி கடை, தினமும் நள்ளிரவு வரை திறந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் கார்த்தி, பேக்கரி கடையை மூடுமாறு அறிவுறுத்தியதாகவும், அதற்கு உரிமையாளர் கூறினால் மட்டுமே கடையை மூடுவேன் என ஊழியர் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த காவலர் கார்த்தி ஊழியரை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், காவலர் கார்த்திக்கை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.