புதுச்சேரியில், பல் மருத்துவரும், சிகிச்சை பெற வந்தவரின் உறவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
டாக்டர் சுமன் என்பவருக்கு சொந்தமான பல் சிகிச்சை மையத்திற்கு சுனந்தினி என்கிற பெண் சிகிச்சைக்காக வருகை தந்துள்ளார். அப்போது, நேரம் ஒதுக்குவதில், அவருக்கும், அங்குள்ள பெண் வரவேற்பாளர் பரணி என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு வெளியே வந்த டாக்டர் சுமன், சுனந்தினியை கண்டித்துள்ளார். இதனால், அவருடன் வந்த ஜோஷ்வா என்பவர், டாக்டரிடம் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் இருவரும் கட்டிப்புரண்டு தாக்கிக் கொண்டனர்.