ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூரில் சாலையில் கார் டயர் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் திருப்பதி நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அரகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற பங்காருபால்யம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். .
நேற்று இதே வழி தடத்தில் அரசு பேருந்து ஒன்று டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.