நேரடி விவாதத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்பியாவில் நடைபெற்றது. காரசாரமாக நடைபெற்ற இந்த விவாதத்தில் இருவரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக் கொண்டனர். இந்த விவாதத்துக்கு பின்னர் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸின் முன்னிலை அதிகரித்துள்ளது.