ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் விசிக உள்ள நிலையில், இந்த மாநாட்டிற்கு அதிமுக, தவெக கட்சிகளுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படும் நிலையில், ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய வீடியோவை திருமாவளவன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் திடீரென பகிர்ந்து பின்னர் நீக்கியுள்ளார்.
அதில், கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும், அதிகாரத்தில் அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் எனவும் பேசியுள்ளார்.