கோவை மாவட்டம் அன்னூர் அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் பத்திரிகையாளரை திமுக நிர்வாகிகள் தாக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
கோவில்பாளையம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், தொண்டாமுத்தூர் ஒன்பது வார்டு உறுப்பினர் வைரம் செந்தில், திடீரென மேடையில் ஏறி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியை குறை கூறியுள்ளதார்.
தொண்டாமுத்தூர் ரவிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கு டீலிங் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள், வைரம் செந்திலை தாக்கினர்.
இதனை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்ய முயன்றதை பார்த்த திமுகவினர். அவரது செல்போனை பிடிங்கி தாக்க முயன்றதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர்.