முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக கொடியை ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரின் அமெரிக்கா பயணம் தோல்வி என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. எனவே முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு வந்தால், அது குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக ஒன்றிணைவது அவர்களின் உட் கட்சி விஷயம். ஒன்றிணைந்தால்தான் பலம் என பிரேமலதா தெரிவித்தார்.