381 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதாக மத்திய விமான நிலைய ஆணைய தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளரை சந்தித்த அவர், தூத்துக்குடி விமான நிலையத்தில் மிகப்பெரிய அளவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், டெர்மினல் கட்டடம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு 381 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
விமான நிலைய ஓடுபாதை விரிவுபடுத்தப்படும் என்று கூறிய அவர், டெர்மினல் கட்டடப் பணி வரும் டிசம்பருக்குள் நிறைவடையும் என தெரிவித்தார். இதேபோல புதிய கட்டுப்பாட்டு கோபுர பணி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
இதுதவிர விமான நிலையத்தில் மூன்று மேம்பாலங்கள் கட்டத் திட்டமிட்டிருப்பதாகவும், டெர்மினல் கட்டடம் 17 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் என்றும் விமான நிலைய ஆணைய தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.