கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களிடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற மம்தா பானர்ஜி முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மருத்துவரின் கொலைக்கு நீதிகேட்டு, அம்மாநில சுகாதார அமைச்சகம் முன் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, மருத்துவர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அப்போது மம்தாவின் வீட்டுக்கு முன்பு நின்றுகொண்டிருந்த மருத்துவர்கள் உடனான சந்திப்பை நேரலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நிலையில் நேரலைக்கு சாத்தியமில்லை என மம்தா பானர்ஜி கூறியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.