பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில், சென்னை கடற்கரை பணிமனையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இதனால் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சில ரயில்கள் பகுதிநேர ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இருமாா்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.