சிவகங்கை அருகே பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் மேப்பல் கிராமத்தைச் சேர்ந்த, 280- வது பூத்தில் பொதுமக்களிடம் நேரடியாக சென்று ‘மிஸ்டு கால்’ இணைப்பு எண் மூலமாக மற்றும் ‘நமோ செயலி’ மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை பணிகளில் ஈடுபட்டோம்.
பாரதப் பிரதமர் மோடியின் நல்லாட்சி குறித்தும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இணைவதன் அவசியம் குறித்தும் விளக்கினோம்.
சிவகங்கை மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, மூத்தத் தலைவர், சுபநாகராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.