விடுமுறை மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் விடுமுறை தினத்தை மகிழ்ச்சியுடன் கழிக்கவும், ஓணம் பண்டிகையை கொண்டாடவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்தனர்.
தாவரவியல் பூங்காவில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வெளிநாட்டு வண்ண மலர்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.