தமிழகத்தில் அதிமுக, திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை நெல் பேட்டை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு செல்லூர் ராஜூ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு மட்டும் அல்ல. அனைத்து போதை ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டியதுள்ளது. அந்த அளவுக்கு மது, போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் அதிமுக , திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.