நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்த கட்சி காங்கிரஸ் என பிரதமர் மோடி விமர்சித்தார்.
ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஜாம்ஷெட்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, அம்மாநில ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசை கடுமையாக விமர்சித்தார்.
முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், சீதா சோரன் ஆகியோரை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அவமதித்ததாகவும், ஊழல் செய்வது தொடர்பாக காங்கிரஸிடம் அக்கட்சி பாடம் பயிலுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ஜார்க்கண்டில் அமைந்த அரசுகள், கனிம வளத்தை சுரண்டி கொள்ளையடித்ததாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிர ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் ஜார்க்கண்டுக்கு எதிரிகளாக செயல்படுவதாக மோடி தெரிவித்தார்.