தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முயற்சியால் சேலம் பேளூர் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலில், நான்கு கால் மண்டபம் பூமி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் பழமை வாய்ந்த பேளூர் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவில் நான்கு கால் மண்டபம், வாகன விபத்து ஒன்றில் சேதம் அடைந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் விடுத்த கோரிக்கையை இந்து சமய அறநிலையத்துறை கண்டு கொள்ளவில்லை. இதனிடையே, என் மண் என் மக்கள் ரத யாத்திரையின்போது இந்த கோவிலுக்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், நான்கு கால் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், கோவை தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரின் பங்களிப்புடன், சுமார் 15 லட்சம் மதிப்பில் புதிய மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் பூமி பூஜையுடன் துவங்கியது. வேத மந்திரங்கள் முழங்க பூரண கும்ப கலசத்திற்கு மலர்களால் அர்ச்சனை செய்து யாக பூஜை மற்றும் பூமி பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், பங்கேற்றவர்கள், நான்கு கால் மண்டபம் அமைக்க காரணமாக இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்தனர்.