டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பைத் தொடர்ந்து, சட்டப் பேரவையைக் கலைக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.
48 மணிநேரத்தில் முதல்வர் பதவியிலிருந்து விலக போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்த நிலையில், பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி மற்றும் டெல்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு சிரிப்பை வரவழைப்பதாக கூறிய சுதான்ஷு திரிவேதி, அவரிடம் சிறிது அளவாவது உண்மை இருந்தால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, சட்டப் பேரவையைக் கலைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.