திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பழுதடைந்த காணப்பட்ட பிரதான கொடிமரம் மற்றும் எட்டுத்திக்கு கொடிமரம் பாலாலயம் செய்யப்பட்டு அகற்றப்பட்டது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் புதிய கொடிமரங்கள் உபயமாக பெறப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டு, கணபதி பூஜை மற்றும் வாஸ்து பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர் ஜம்புகேஸ்வரர் சன்னதியின் பிரதான கொடிமரம் மற்றும் எட்டுத்திக்கு கொடிமரத்திற்கு அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க, கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.