பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “நமது பாரதப் பிரதமர் மோடியின் 74-வது பிறந்த தினம் இன்று. வாழ்நாள் முழுமைக்கும் தேசப் பணிகளுக்கென்று தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் நமது பிரதமர் அவர்கள், ஒரு மாநிலத்தின் முதல்வராகவும், பன்னெடுங்கால பழமையும் பெருமையும் கொண்ட பாரத தேசத்தின் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றும், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திக் காட்டியுள்ளார்.
மேலும், 2047 ஆம் ஆண்டிற்குள் பாரத தேசத்தை வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். கல்வியறிவு, தொழில்நுட்பம், விவசாயம், தொழில்வளம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு என்று ஒவ்வொரு துறையிலும் தனது சிறப்பு கவனத்தைச் செலுத்தி, உலகின் சக்திவாய்ந்த தேசமாக இந்தியாவை கட்டமைக்க முழுமையான பங்களிப்பு நல்கி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாகவும், நாட்டு மக்கள் அனைவரது சார்பாகவும் அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல்லாண்டு கால ஆயுள் பெற்று, மாறாத மகிழ்வுடன் திகழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.