பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளில் 74 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்கக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது : “பாரத பிரதமர் மோடியின் 74 வது பிறந்த தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 17 அன்று பாஜக கார்யகர்த்தர்கள் ஒவ்வொருவரும் 74 உறுப்பினர்களை பாஜகவில் சேர்ப்பதே பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் சொல்கிற சிறந்த வாழ்த்து செய்தியாகவும், நாம் அளிக்கிற உயர்ந்த பிறந்தநாள் பரிசாகவும் இருக்கும். அனைவரும் முழுமையாக இப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதேபோல் மற்றொரு பதிவில், வளர்ச்சியாக இருந்தாலும் சரி கலாச்சாரமாக இருந்தாலும் சரி வெளியுறவாக இருந்தாலும் சரி மக்களை பாதுகாப்பதிலும் சரி தேசத்தை பாதுகாப்பதிலும் சரி அவருக்கு நிகர் அவரே!
பாரத தேசத்தின் தலை மகன் பாரதத்தை உலகின் குருவாய் உயர்த்திட ஒவ்வொரு கணமும் உழைத்திடும் பாரத பிரதமர் வளர்ச்சியின் நாயகன் மோடியின் பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன். பாரத பிரதமர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளோடும் நீங்கா புகழோடும் பாரத தேசத்தை காத்திட எம்பெருமான் ஈசனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.