பெண் மருத்துவர் வழக்கில் நீதி கேட்டு போராடி வரும் மருத்துவர்களின் 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி பெண் மருத்துவர் கடந்த மாதம் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மருத்துவர்களின் பொதுக்குழு கூட்டத்தின்போது, குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையில் தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், மருத்துவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 4 கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.