இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்து ஈரான் மதகுரு அயதுல்லா அலி கொமேனி தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
அயதுல்லா அலியின் எக்ஸ் பதிவில், மியான்மர், காசா, இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டிலும் சிறுபான்மையினர் அனுபவிக்கும் துன்பங்களை நாம் கவனிக்காமல் இருந்தால் நம்மை இஸ்லாமியராக கருத முடியாது என பதிவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் மத தலைவர் கொமேனி இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளார் என்றும், அதனை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது. தங்கள் நாட்டின் நிலையை உணர்ந்து விட்டு கருத்துச் சொல்ல வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.