அமெரிக்காவின் நியூயார்க்கில் சுவாமி நாராயணன் கோயில் சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
நியூயார்க் நகரில் பி.ஏ.பி.எஸ். எனப்படும் போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் என்ற அமைப்பு கட்டியுள்ள சுவாமி நாராயணன் கோயில் மெல்வெல்லியில் உள்ளது. இக்கோயில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியுள்ளது.
இதற்கு இந்தியா அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு கண்டனத்தை பதிவு செய்தது. மேலும், இச்செயலில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.