விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஹைதராபாத் பாலாபூர் விநாயகர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட லட்டு 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம்போனது.
அதை உள்ளூர் பாஜக தலைவர் கோலன் சங்கர் ரெட்டி ஏலத்தில் எடுத்தார். பாலாபூர் விநாயகர் கோயில் லட்டை ஏலம் விடும் நடைமுறை கடந்த 1994-இல் தொடங்கியது. அப்பொழுது லட்டு 450 ரூபாய்க்கு ஏலம்போனது.
இதேபோல விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஹைதராபாத் கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட லட்டு ஒரு கோடியே 87 லட்ச ரூபாய்க்கு ஏலம்போனது.