ஹிந்தி ரசிகர்களை கவரும் தமிழ் திரைப்படங்கள் - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிந்தி ரசிகர்களை கவரும் தமிழ் திரைப்படங்கள் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 17, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிவிஆர் ஐநாக்ஸ் போன்ற மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், தென்னிந்தியப் படங்களை வட மாநிலங்களில் திரையிடத் தயங்கி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள், ஹிந்தி ரசிகர்களை கவர்ந்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தென்னிந்திய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நான்கு வாரங்களுக்குள் OTT தளத்தில் வெளியாகின்றன. திரையரங்குகளில் வெளியாகி குறைந்தது எட்டு வாரங்கள் கழித்து தான் OTT தளத்தில் வெளியாகவேண்டும் என்று PVR, ஐனாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சொல்லி வந்தனர்.

கடந்த ஜனவரியில், நெட்ஃப்ளிக்ஸ் தனது OTT தளத்தில் வெளியாகும் அனைத்து படங்களின் பட்டியலையும் வெளியிட்டிருந்தது. அதில் கமல்ஹாசனின் இந்தியன் 2, விக்ரமின் ‘தங்கலான்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே21’, கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீடா’ மற்றும் ‘கண்ணிவெடி’, விஜய் சேதுபதியின் ‘மஹாராஜா’, ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ , சதீஷின் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ ஆகிய தமிழ் படங்கள் இடம் பெற்றிருந்தன.

அதனாலேயே PVR, ஐனாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், வட மாநிலங்களில் தங்கள் திரையங்குகளில் அவற்றைத் திரையிடுவதில்லை என முடிவு செய்தன. இருந்தபோதிலும், மற்ற சிறிய மல்டிபிளக்ஸ்கள் மற்றும் தனி திரையரங்குகள் தமிழ் திரைப் படத்தை வெளியிட்டு லாபம் சம்பாதித்து வருகின்றன.

சமீப காலமாக, இந்தி பேசும் மாநிலங்களில் திரைக்கு வரும் படங்களில் உள்ளடக்க வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கலான் மற்றும் டிமான்டே காலனி 2 போன்ற சிறிய அளவிலான தமிழ் படங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்ப அடியெடுத்து வைத்து வெற்றியும் பெற்றுள்ளன.

இத்தகைய சிறிய பட்ஜெட் தமிழ் படங்களில் RRR மற்றும் KGF போன்ற பிரம்மாண்டம் இல்லையென்றாலும், இந்தி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, இந்தியிலும் திரையிடப்பட்ட விஜய் சேதுபதியின் மஹாராஜா திரைப்படம் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி உள்ளது.

இந்த மாதிரியான திரைப்படங்கள் அந்தந்த மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தாமதமாக வெளியானால் கூட நல்ல லாபத்தைத் தருகின்றன என்று வட மாநில திரையரங்க உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்தப் படங்களுக்கான பார்வையாளர்களில் பெரும்பாலும் வட மாநிலங்களில் வசிக்கும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகம் என்கிறார்கள்.

பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத காலத்தில், திரையரங்குகளின் ஊழியர்களின் சம்பளம், மின்சாரம் மற்றும் பராமரிப்புக் கட்டணங்கள் ஆகியவற்றை சமாளிக்க திரையரங்க உரிமையாளர்கள் தடுமாறுகின்றனர்.

இந்நிலையில், வட மாநிலங்களில் உள்ள திரையரங்குகளின் நிலையை சமீபத்தில் வெளியான தமிழ் படங்கள் மாற்றியுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமே.

Tags: Netflixmultiplex theatersPVR INOXtamil films in hindi marketOTT platformsMaharaja
ShareTweetSendShare
Previous Post

புரட்டாசி மாத பெளர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Next Post

நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம், உங்களை கொஞ்சம் திரும்பி பாருங்கள் – ஈரானுக்கு இந்தியா எச்சரிக்கை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies