கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருமூலஸ்தானம் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தனி பிரிவு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்று கடைகளில் சோதனை செய்த போலீசார், கருணாமூர்த்தி என்பவரின் கடையில் 11 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
புகையிலை பொருட்களை மொத்த விற்பனைக்காக விநியோகம் செய்த சம்பத் என்பவரும் கைது செய்யப்பட்டார்.