இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
தற்போது இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி அண்மைக்காலங்களில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவினாலும், பார்டர் கவாஸ்கர் தொடரில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.