அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ள லப்பர் பந்து திரைப்படத்தின் சில்லாஞ்சிருக்கியே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது `சில்லாஞ்சிருக்கியே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.