டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ஏஆர்எம் திரைப்படம் 5 நாட்களில் 50 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்த டொவினோ தாமஸ் தற்போது ஏஆர்எம் படத்தில் நடித்துள்ளளார். இந்த திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் 50 கோடி வசூலை தாண்டியுள்ளது.