திருப்பதி ஏழுமலையானை 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்த மாதமான புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால், திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதன் காரணமாக இலவச தரிசனத்திற்காக மூன்று கிலோ மீட்டர் வரை பக்தர்கள் வரிசையில் காத்துள்ளனர்.
இதனால், பக்தர்கள் தாங்கள் புக் செய்த அறையை காலி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதிதாக வரும் பக்தர்களுக்கு அறைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்டவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.