இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவத்தின்போது இந்துக்கள் சிலர் கொல்லப்பட்டனர். இதனை கருத்தில்கொண்டு இந்தியா – வங்கதேசம் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை அண்ணா சாலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் பங்கேற்றதோடு, இந்துக்களை காக்க ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் முன்வர வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அர்ஜுன் சம்பத், வங்கதேசத்தில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் வரும் போதும் இந்துக்கள் கொல்லப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், வங்கதேசத்துடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.