தெலங்கானா மாநிலம் நாராயண பேட்டையில் மாறி மாறி தாக்கிக்கொண்ட இந்து, இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
நாராயண பேட்டை பகுதியில் உள்ள வீரசாவர்க்கர் சிலை மீது இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் பச்சைக்கொடி கட்டி வைத்தனர்.
அந்த கொடிகளை கண்ட இந்து அமைப்பினர் அவற்றை தெருவில் வீசி எறிந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மோதல் கலவரமாக மாறியதையடுத்து ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தடியடி நடத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.
மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.