சென்னையில் துண்டு துண்டாக வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்த கரைகளுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது, இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர், அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார், சூட்கேசை திறந்து பார்த்தபோது, பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக இருந்தது தெரியவந்தது. உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணையில் மணலியை சேர்ந்த தீபா என்பதும், பாலியல் தொழில் செய்து வந்த அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தீபாவை துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து வீசியதாக மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார்.