தேசிய அரசியலுக்கும் பெரியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் இது தொடர்பாக பாஜக சார்பில் கரு.நாகராஜன், எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினார்.
இதனைத்தொடர்ந்து கரு-நாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் தேர்தல் செலவு மிச்சமாகும். தேர்தல் நடுத்துவதே வேலையாக இருக்கக் கூடாது என்பதற்காக தான் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கின்றனர்.
தமிழகத்தில் கொலைச்சம்பவங்கள் நடக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யம். தினசரி படுகொலை , என்கவுண்டர் நடக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தமிழகத்தில் 28 கொலைகள் நடந்துள்ளன.
தமிழகத்தில் கே.வி., நவோதயா பள்ளிகள் வர தமிழக அரசு முட்டுக்கட்டையாக உள்ளது. இவர்கள் பவள விழா நடத்துவதிலும், துணை முதல்வர் குறித்துமே ஆலோசிக்க நேரம் சரியாக உள்ளது.
நடிகர் விஜய் இன்னும் தீவிர அரசியலுக்கு வரவில்லை. பெரியார் நினைவிடம் செல்வது அவர் விருப்பம். தேசிய அரசியலுக்கும் பெரியாருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது ஆன்மிக பூமி, பெரியார் பூமி இல்லை.
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டேன் என்ற கலைஞர், ஸ்டாலின் வழியில் உதயநிதி போகலாம் ஆனால் விஜய் போகிறார்.. அது அவர் விருப்பம் என கரு.நாகராஜன் கூறினார்.