திருச்சி அருகே தமிழக அரசின் சத்துணவு முட்டைகளை தனியார் உணவகத்திற்கு விற்பனை செய்த புகாரில், சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில், துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் இயங்கி வரும் தனியார் உணவகம் ஒன்றில், அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகளை இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்து, ஆம்லெட் போட்டு 15 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதனை சிலர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். இதுதொடர்பான புகாரின் பேரில், உணவக உரிமையாளர் ரத்தினம் மற்றும் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சத்துணவு அமைப்பாளர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.