வடசென்னையின் பிரபல ரவுடியாக காக்கா தோப்பு பாலாஜி மாறியது எப்படி?
Sep 14, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடசென்னையின் பிரபல ரவுடியாக காக்கா தோப்பு பாலாஜி மாறியது எப்படி?

Murugesan M by Murugesan M
Sep 19, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வியாசர்பாடி அருகே என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பிராட்வே பகுதியைச் சேர்ந்த பாலாஜி சென்னையின் பிரபல ரவுடியாக மாறியது எப்படி ? என்கவுண்டர் நடைபெற்றது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் நீ என்னவாக போகிறாய்? என ஆசிரியர்கள் கேட்கும் கேள்விக்கு நான் மருத்துவராக போகிறேன், எஞ்சினியராகப் போகிறேன், கலெக்டராக போகிறேன் என சொல்லி கேள்விபட்டிருப்போம்.

ஆனால் தம்முடைய உறவினர் துரையைப் போலவே தாமும் ரவுடியாவேன் எனக்கூறியவர் தான் இந்த காக்கா தோப்பு பாலாஜி. மாணவ பருவத்திலேயே அடி, தடி, வழக்குகளில் கைது செய்யப்பட்ட பாலாஜி மீது ஆறு கொலை வழக்குகள், 17 கொலை முயற்சி வழக்குகள், ஒரு கஞ்சா வழக்கு உட்பட மொத்தமாக 59 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அடிக்கடி சிறைக்கு சென்றுவந்த பாலாஜிக்கு காக்காதோப்பு பகுதி ரவுடிகள் இன்பராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோரின் நட்பு கிடைத்தது. மூவரும் இணைந்து மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவை கொலை செய்தனர். பின்னாளில் இன்பராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோருக்கும் பாலாஜிக்கும் இடையே மோதல் உருவானது. தனக்கு எதிராக இருந்த யுவராஜை கொலை செய்த பாலாஜி, காக்காதோப்பு பாலாஜியாக உருவெடுத்தார்.

வடசென்னையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர தடையாக இருந்த அனைவரையும் காக்க தோப்பு பாலாஜி தீர்த்து கட்டினார். வடசென்னை ரவுடி சாம்ராஜ்யத்தில் கொடிகட்ட பறந்த பாலாஜியின் எல்லை விரிவடையத் தொடங்கியது. செம்மரக் கடத்தல் தொடர்பில் இருந்தவர்களுடன் நெருக்கம் காட்டி அந்த தொழிலும் ஈடுபடத் தொடங்கினார் காக்கா தோப்பு பாலாஜி.

சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளை காவல்துறையினர் தீவிரப்படுத்திய நிலையில், தலைமறைவானார் காக்காதோப்பு பாலாஜி

இதற்கிடையில் சென்னை அண்ணா சாலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் காக்கா தோப்பு பாலாஜியும், அவரது நெருங்கிய நண்பர்களும் காரில் சென்று கொண்டிருந்த போது ரவுடி சம்போ செந்தில் தரப்பினர் நாட்டு வெடிகுண்டை வீசியதில் காக்கா தோப்பு பாலாஜி நூலிழையில் உயிர் தப்பினார். அதன் பின் போலீசார் கைது செய்யப்பட்ட பாலாஜி சிறையிலிருந்து திரும்பிய பின் ஆந்திர எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்து வழக்கம் போல ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து தொழில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கொடுங்கையூர் முல்லை நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அப்பகுதியில் வேகமாக சென்ற கார் ஒன்றை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அதில் காக்கா தோப்பு பாலாஜி இருப்பது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினருக்கும், ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கும் இடையே நடைபெற்ற மோதலில் காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டார்.

Tags: Chennairowdy Kaka Thoppu BalajiKaka Thoppu Balaji encounterBroadway
Share
Tweet
SendShare
Previous Post

சத்துணவு முட்டைகளை தனியார் உணவகத்திற்கு விற்பனை செய்த புகார் – சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்!

Next Post

வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies