கடலூர் அருகே செப்டிக் டேங்க் ஆட்டோ, நடுரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
கடலூர் முதுநகர் குயவன் குளத்தை சேர்ந்த சுபாஷ், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் உள்ளிட்ட 4 பேருடன் முள்ளோடையிலிருந்து கடலூர் நோக்கி ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கங்கணாங்குப்பம் ஆல்பேட்டை பாலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் கழிவுகள் சாலையில் கொட்டி துர்நாற்றம் வீசுயதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.