ஸ்டெர்லைட் வன்முறை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 6ஆம் தேதி வட்டாட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அலுவலருக்கு வட்டாட்சியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளார்.
மேலும், துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வருவாய் துறை அலுவலர் மு. கண்ணனுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை எனக்கூறியுள்ள அவர்,
மாறாக திருச்செந்தூர் துணை வட்டாட்சியரான து.கண்ணனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் விளக்கமளித்துள்ளார்.