இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன் விற்பனை தொடங்கிய நிலையில் டெல்லி, மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் கூட்டம் அலைமோதியது.
மும்பையில் ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் கவுண்டவுன் கூறி வாடிக்கையாளர்களை கடைக்குள் அழைத்தனர். மும்பை மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு முன்பு கூட்டம் கூட்டமாக ஐபோன் பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று ஐபோன் 16 சீரிஸ் போன்களை வாங்கி சென்றனர்.
இதற்காக விடிய விடிய வரிசையில் நின்றதாக கூறிய பலர் ஆப்பிள் போன் தங்கள் கைகளில் தவழும் நொடிக்காக ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தனர்.