கோவையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் கால்களில் சுட்டுப்பிடித்தனர்.
நாகர்கோயிலை சேர்ந்த ஆல்வின் என்பவர் குற்றவழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் கோவை கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், ஆல்வினை பிடித்து அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது ஆல்வின் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியதில், தலைமை காவலர் ராஜ்குமார் என்பவர் காயமடைந்தார். இதையடுத்து தப்பி ஓட முயன்ற ஆல்வினின் காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில் காயமடைந்த ஆல்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.