சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக்க குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இதை ஏற்று அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
அந்த வகையில் நீதிபதிகள் விக்டோரியா கெளரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமது சென்னை நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. நீதிபதிகள் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.