பிராந்திய நகரங்களை இணைக்கும் நமோ மெட்ரோ ரயில் சேவை - சிறப்பம்சம் என்ன?
Oct 6, 2025, 11:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிராந்திய நகரங்களை இணைக்கும் நமோ மெட்ரோ ரயில் சேவை – சிறப்பம்சம் என்ன?

Web Desk by Web Desk
Sep 22, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதல் நமோ மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். விரைவில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களுக்கும் இந்த ரயில் சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

அதிவேக ரயிலின் புதிய வடிவமான வந்தே மெட்ரோ, ‘நமோ பாரத் விரைவு ரயில்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிராந்திய நகரங்களை இணைக்கும் நோக்கத்தில், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுக்கு மாற்றாக புதிய அதிவேக ரயிலை குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

மக்கள் அதிகம் கூடும் நகரங்களுக்கு இடையே இந்த புதிய இரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், இந்த அதிவேக நமோ பாரத் ரயில் மூலம் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு விரைவாக செல்லமுடியும் என்றும் கூறியுள்ளது.

1150 பயணிகள் அமர்ந்து கொண்டும் 2,058 பேர் நின்று கொண்டும் பயணம் செய்யும் வகையில், நமோ பாரத் ரயிலில் 12 பேட்டிகள் உள்ளன. முழு பெட்டிகளும் குளிர் சாதன வசதி உள்ள இந்த ரயிலில் பயணிக்க 455 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புஜ் முதல் அகமதாபாத் இடையிலான 359 கிலோ மீட்டர் தூரத்தை இந்த நமோ பாரத் ரயில் ஐந்தே முக்கால் மணி நேரத்தில் கடக்கும்.

பொதுவாக 100, 200 அல்லது 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களுக்குச் சென்று வர மக்களுக்கு குறைந்த அளவிலான போக்குவரத்து வசதிகளே உள்ளன. பெரும்பாலும் ரயிலில் சென்றாலும், முக்கிய நகரங்களின் புறநகர் பிரிவுகளில் இயங்கும் மின்சார ரயில்கள் மட்டுமே உள்ளன. எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிறு ஊர்களில் நிற்காது என்பதால் , மக்களுக்குப் போக்குவரத்து சிரமமாகவே உள்ளது.

பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவித்தாலும், பயணிகள் வேகமான மற்றும் வசதியான பயண பயணத்தையே விரும்புகிறார்கள்.

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு கடந்தாண்டு டெல்லி மற்றும் மீரட் இடையே தொடங்கப்பட்டது. இந்த புதிய சேவை டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் இடையே பயணிப்பவர்களுக்கு பயணத்தை எளிதாக்கிறது என்றாலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

அதாவது, டெல்லி மெட்ரோவைப் பொறுத்தவரை, ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கான கட்டுமான செலவு, 200 கோடி ரூபாய் முதல் 600 கோடி ரூபாய் வரை ஆகிறது என்றால், RRTS-க்கு ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 400 கோடி ரூபாய் ஆகிறது. மேலும் RRTS திட்டங்களை உருவாக்கும் நேரமும் அதிகமாகிறது.

இந்திய ரயில்வேயில் சுமார் 62,000 கிலோமீட்டர் நீள அகலப்பாதை (BG) நெட்வொர்க் உள்ளது. இது நாடு முழுவதும் நிலையங்களையும் கொண்டுள்ளது. எனவே வேகமான, நவீன மற்றும் வசதியான ரயில் சேவையை இயக்குவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு ஏற்கெனவே தயாராக உள்ளது. புதிய ரயில் பெட்டிகளை மட்டுமே உருவாக்க வேண்டும் . அதற்கான முதலீடு இருந்தால் மட்டும் போதுமானது.

ஏற்கனவே உள்ள இருப்பு பாதைகளையும் மற்றும் ஏற்கனவே உள்ள ரயில் நிலையங்களையும் வந்தே மெட்ரோ ரயில்களுக்காக எளிதில் செலவில்லாமல் பயன்படுத்தக் கொள்ள முடிகிறது.

மேலும், வந்தே மெட்ரோ ரயில்கள் முழுமையாக குளிரூட்டப்பட்ட பயணங்களை வழங்குகின்றன. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த இரயில்களில், கவச் பொருத்தப்பட்டிருப்பதால் பயணப் பாதுகாப்பையும் வழங்குகிறது.

குளிரூட்டப்பட்டப் பெட்டிகள், குஷன் இருக்கைகள் , நவீன உள் அலங்கார வடிவமைப்புக்கள், விபத்துக்களைத் தவிர்க்கும் கவச் தொழில் நுட்பம், தீவிபத்து எச்சரிக்கை கருவிகள், தீயை அணைக்கும் வசதிகள், அவசர கால விளக்குகள், இந்த நமோ பாரத் இரயிலில் பொருத்தப் பட்டுள்ளன.

மேலும்,மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்த ஏதுவாக கழிப்பறை வசதிகள், மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி, மற்றும் அதற்கான இணைப்பு கருவிகள், சிறந்த உணவு வசதி,கண்காணிப்பு கேமிரா, ஆபத்து காலங்களில் ஓட்டுனருடன் பேசும் வசதி என நவீன வசதிகள் பல இந்த நமோ பாரத் ரயிலில் உள்ளன.

அமிர்த் பாரத் ,வந்தே பாரத் ,நமோ பாரத் ஆகிய மூன்றும் இந்திய ரயில்வே துறையின் நவீனமயமாக்கலின் அடையாளமாக விளங்குகின்றன.

Tags: Namo Bharat Expresscentral governmentprime minister modiNamo Metro train serviceVande Metro
ShareTweetSendShare
Previous Post

புரட்டாசி சனிக்கிழமை – கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை!

Next Post

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – பிரதமர் மோடி சந்திப்பு : இருதரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை!

Related News

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

தமிழ் ஜனம் டிவியை தடை செய்ய திமுக அரசுக்கு எந்த அருகதையும் இல்லை : கே.பி.ராமலிங்கம்

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

சரணாலயம் அமைக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத்

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies