திமுக ஆட்சியில் தமிழக இளைஞர்கள் மதுபோதைக்கு அடிமையாகி கிடப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் அண்ணா பிறந்தாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகள் வராத நாளே இல்லை என தெரிவித்தார்.
100 கோடி ரூபாய் செலவில் கார் ரேஸ் நடத்தும் தமிழக அரசிடம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் கொடுக்க நிதி இல்லையா என கேள்வி எழுப்பினார்.