மும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதியின் ஒரு பகுதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராவியில் உள்ள மஹ்பூபா-இ-சுபானி மசூதியின் ஒருபகுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அதனை இடிக்க நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர்.
அப்போது மசூதியின் ஒரு பகுதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.