உத்தர பிரதேசத்தில் இருப்பு பாதையில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் கிடந்ததால் பீதி நிலவியது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் சென்ற சரக்கு ரயில், பிரேம்பூர் ரயில் நிலையம் அருகே அதிகாலை வந்தபோது இருப்பு பாதையில் 5 கிலோ கியாஸ் சிலிண்டர் கிடந்தது.
இதையறிந்த ஓட்டுநர், அவசர பிரேக்கை அழுத்தி உடனடி ரயிலை நிறுத்தினார். சோதனையில், அது காலி சிலிண்டர் என்பது தெரியவந்தது. கியாஸ் சிலிண்டரை இருப்பு பாதையில் வைத்த நபர் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.