நீளும் மர்மம் - லெபனான் PAGER வெடிப்பு சம்பவத்தில் இந்தியருக்கு தொடர்பா? சிறப்பு கட்டுரை!
Sep 10, 2025, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீளும் மர்மம் – லெபனான் PAGER வெடிப்பு சம்பவத்தில் இந்தியருக்கு தொடர்பா? சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Sep 22, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனானில் நடைபெற்ற பேஜர் மற்றும் வாக்கி – டாக்கி தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞருக்கும், தனியார் நிறுவனத்தின் பெண் தலைமைச் செயல் அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

MESSAGE அனுப்ப பயன்படும் PAGER கருவியைக் கொண்டு கொலை செய்ய முடியும் என  காட்டியிருக்கிறது லெபனான் தாக்குதல். இஸ்ரேலின் உளவு அமைப்பான MOSSAD-தான் இதைச் செய்தது என்கிறார்கள். இருப்பினும் அதைப்பற்றி வாயே திறக்காமல் இருக்கிறது MOSSAD.

எந்த உளவு அமைப்பாவது தாம் மேற்கொண்ட ரகசிய OPERATION-ஐ பொதுவெளியில் ஒப்புக்கொள்ளுமா? அப்படியிருக்கையில் MOSSAD-இடம்… அதுவும் எமகாதக MOSSAD-இடம் இதை எதிர்பார்க்கலாமா?

சரி… இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் என்ன பிரச்னை? PAGER பயன்படுத்தப்பட்ட காலத்துக்கு முன்பு சென்றால்தான் அதை அறிய முடியும். அரேபியர்கள் பெரும்பான்மையாகவும் யூதர்கள் சிறுபான்மையாகவும் வாழ்ந்து வந்த பாலஸ்தீனம் முதலாம் உலகப்போருக்கு பிறகு பிரிட்டன் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. அங்கிருந்த ஜெருசலேம் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு முக்கியமான நகராக இருந்தது. ஹிட்லர் காலத்தில் யூதர்களின் குடியேற்றம் அதிகரித்ததால் அரேபியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது.

1947-ல் பாலஸ்தீனத்தை விட்டு பிரிட்டன் வெளியேறிய போது அந்நாட்டை இரண்டாக பிரித்து யூதர்களுக்கு ஒரு பகுதியையும் அரேபியர்களுக்கு மற்றொன்றையும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதை ஏற்க அரேபியர்கள் மறுத்துவிட்டனர். 1948-ல் இஸ்ரேல் என்னும் தனி நாடு உருவாக்கப்பட்டதாக யூத தலைவர்கள் அறிவிக்க அமெரிக்காவும் அதை அங்கீகரித்தது. அப்போது ஏற்பட்ட போரில் லட்சக்கணக்கான அரேபியர்கள் நாட்டை விட்டு வெளியேறி காஸா, மேற்கு கரை, ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானில் குடியேறினர்.

அன்று முதல் இன்று வரை இஸ்ரேலுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான மோதல் நின்றபாடில்லை. பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா போன்ற ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிராக சண்டை செய்து வருகின்றன. எமகாதக MOSSAD எதற்காக லெபனானை குறிவைத்தது என்று இப்போது புரிந்திருக்கும்.

1996-ல் செல்போனை பயன்படுத்தி ஹமாஸ் அமைப்பின் வெடிகுண்டு நிபுணரை கொலை செய்தது இஸ்ரேல். இதனையடுத்து, அந்நாட்டுக்கு எதிராக போராடி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போனுக்கு பதிலாக PAGER மற்றும் வாக்கி டாக்கிகளை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான PAGER-கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. அவற்றை தொடர்ந்து வாக்கி டாக்கிகளும் வெடித்தன. இந்த தாக்குதலில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

PAGER-கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலேயே அவற்றில் 3 கிராம் அளவுக்கு வெடி மருந்தை நிரப்பி, பிரத்யேக CODE மூலம் ஓரே நேரத்தில் வெடிக்க வைத்தது MOSSAD எனக்கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் நார்வே குடியுரிமை பெற்றவருமான ரின்சன் ஜோஸ் என்பவரின் பெயர் அடிபடுகிறது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள ONDAYANGADI கிராமத்தைச் சேர்ந்த டெய்லர் MOOTHEDATH JOSE-ன் மகனான ரின்சன் ஜோஸ், பல்கேரிய தலைநகர் SOFIA-ல் NORTA GLOBAL என்ற நிறுவனத்தை நடத்தியதாக தெரிகிறது. லெபனானில் வெடித்துச் சிதறிய PAGER-கள் NORTA GLOBAL நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் அதன் இணையதளம் திடீரென நீக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட முகவரியில் NORTA GLOBAL நிறுவனத்தின் அலுவலகம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ரின்சன் ஜோஸ் மீது சந்தேக ரேகைகள் படர்ந்துள்ள நிலையில், தமக்கும் லெபனான் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்கேரிய காவல்துறையும் அதையேதான் சொல்கிறது. இதற்கிடையே ரின்சன் ஜோஸின் சொந்த ஊரான ONDAYANGADI கிராமத்தில் கேரள காவல்துறையும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 3 நாட்களாக ரின்சன் ஜோஸை தொடர்புகொள்ள முடியவில்லை என்று உறவினர்கள் கூறியதாக தெரிகிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க லெபனான் தாக்குதலில் ஹங்கேரியைச் சேர்ந்த தனியார் நிறுவன பெண் தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ்டியானாவுக்கு தொடர்பு இருப்பதாக புது மர்மமுடிச்சு போடப்படுகிறது.

வெடித்த PAGER-களை தயாரித்தது தைவானின் GOLD APOLLO நிறுவனம் என முன்பு கூறப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட கருவிகளை தாங்கள் தயாரிக்கவில்லை என்று GOLD APOLLO விளக்கமளித்தது. வெடித்துச் சிதறிய PAGER-களில் தங்களது பெயரை பயன்படுத்தியது ஹங்கேரியைச் சேர்ந்த BAC CONSULTING என்றும், அதற்கான உரிமத்தை அந்நிறுவனத்துக்கு வழங்கியிருப்பதாகவும் GOLD APOLLO தெரிவித்தது.

இதன் மூலம் ஹங்கேரி தலைநகர் BUDAPEST-ல் இயங்கி வந்த BAC CONSULTING நிறுவனத்தின் CEO CRISTIANA BARSONY ARCIDIACONO சந்தேக வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

ஏழு மொழிகளை பேசத் தெரிந்த கிறிஸ்டியானா, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட PAGER-களை தாம் தயாரிக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் BROKER-ஆக மட்டுமே செயல்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதன்பிறகு கிறிஸ்டியானாவை யாரும் பார்க்கவில்லை. அவர் எங்கே சென்றார்? தலைமறைவாகிவிட்டாரா? யாராவது அவரை கடத்திவிட்டார்களா? என தெரியவில்லை.

இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற கிறிஸ்டியானா அதன்பிறகு அறிவியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்கிறார் அவருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர். கடினமான இயற்பியல் துறையில் PH.D. முடிக்கும் அளவுக்கு அறிவு கொண்ட கிறிஸ்டியானா, அதன் பிறகு அதை தொடராமல் போனது ஏன்? அவரது அறிவு யாருக்கு பயன்பட்டது? கிறிஸ்டியானாவுக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரின்சன் ஜோஸுக்கும் தொடர்பு உள்ளதா? இவர்களுக்கும் MOSSAD-த்துக்கும் என்ன சம்பந்தம்? இப்படி PAGER வெடிப்பின் பின்னணியில் PAGE கணக்கில் நீண்டு கொண்டே செல்கின்றன மர்மங்கள்…

Tags: pager and walkie-talkie attacksMOSSADPalestineIsraelLebanonIndian-origin youth
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் பார் அருகே துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

Next Post

ஈரோட்டில் சலுகை விலையில் ஜவுளி விற்பனை – வாடிக்கையாளர்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies