வார விடுமுறையொட்டி குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதால் குற்றாலத்தில் நீர்வரத்து சீராக உள்ளது. இந்நிலையில், வார விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
மெயின் அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் அலைமோதிய சுற்றுலாப் பயணிகள், தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர்.