மதுரையில் நடைபெற்ற காவலர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் 24 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த காவல் துறையினர் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
2000-ஆம் ஆண்டு பயிற்சி முடித்து பணியில் சேர்ந்த காவலர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான காவல் துறையினர் கலந்துகொண்டனர்.
இதில், 24 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்துக் கொண்ட காவல் துறையினர் ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.