திமுக – காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 600 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், பாஜக ஆட்சியில் மீனவர்கள் மீட்கப்படுவதாகவும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி சென்னை புஷ்பா நகரில் தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாமை தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா மற்றும் தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹெச்.ராஜா, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரில் 3 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள 24 பேரையும் என்கவுண்டர் செய்துவிட்டால் வழக்கு சரியாகிவிடும் என்றும் அவர் பேசினார்.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் 600 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், பாஜக ஆட்சிக்காலத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகள் எடுத்துவருவதாக கூறினார்.
ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆயுஸ்மான் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,நன்றி தெரிவித்தார்